பள்ளி ஆசிரியர்களுக்கு இந்திய கணக்காளர் கல்வி குழுமம் சார்பில் ”சிம்ஏ” படிப்புக்கான பயிற்சி

கோவை, ஜனவரி 06

இந்திய கணக்காளர் கல்வி குழுமம் கோவை பதிப்பகம் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கான ” சிம்ஏ” படிப்புக்கான பயிற்சி வழங்கப்பட்டது. 

”சிம்ஏ” படிப்புகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதன்மை கல்வி அதிகாரியின் உதவியுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயிற்சி பெறும் ஆசிரியர்கள், ப்ளஸ் 2 அல்லது பட்டப்படிப்பு நிறைவு செய்யும் மாணவர்களுக்கு, எதிர்காலத்தில் எந்தத் துறையை தேர்வு செய்வது என்பது குறித்து சரியான வழிகாட்ட உதவியாக இருக்கும். 

இந்திய கணக்காளர் கல்வி குழுமம், நாடு முழுவதும் நான்கு பிராந்தியங்களில் தங்களது கிளைகளை நிறுவியுள்ளது. சென்னை, கொல்கத்தா, மும்பை, தில்லி போன்ற பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கணக்காளர் படிப்பை தேர்வு செய்து உறுப்பினர்களாக இருப்பவர்கள், படித்துக் கொண்டே பணிபுரிகின்றனர். குறிப்பாக, உலகம் முழுவதும் உள்ள தொழில்நிறுவனங்களின் வர்த்தக விபரத்தைக் கணக்கிடுகின்றனர். 

இந்தக் கல்வி நிறுவனமானது, நாட்டை வளப்படுத்தும் மத்திய அரசின் திட்டங்களான ஸ்வச் பாரத் அபியான், ஒரே தேசம் ஒரே வரி (ஜிஎஸ்டி) போன்ற திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. குறிப்பாக, கடந்த ஜுலை 1-ம் தேதி நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபோது, மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்த ஆலோசனைகளையும், பங்களிப்பையும் வழங்கியது. 

தரமான கணக்காளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளின் அனுமதியுடன், மாவட்டந்தோறும், இந்திய கணக்காளர் கல்வி குழுமத்தின் பயிற்சி மையம் நிறுவப்பட்டுள்ளது. இதில், பயிற்சி பெற்றவர்கள் இந்தியாவில் உள்ள ஐஐஎம் போன்ற முதன்மை கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...