தேசிய அளவில் சிறந்த காவல் நிலையமாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்வு

தேசிய அளவில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் விருது வழங்கினார்.


கோவை, ஜனவரி 6

தேசிய அளவில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட  கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் விருது வழங்கினார்.

குற்றத்தடுப்பு, கொள்ளை போன பொருட்கள் மீட்கப்படுதல், சுகாதாரம் மற்றும் மழை நீர் சேகரிப்பு ஆகியவற்றை சிறப்பாக மேலாண்மை செய்யும் காவல் நிலையங்களுக்கு விருது வழங்க இருப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.  இந்த விருதுக்காக இந்தியாவில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களை காவல்துறை வளர்ச்சி மையம்  பட்டியலிட்டது.

இதற்காக தமிழக அரசின் சார்பில்  கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள எல்லைப்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது இன்று வழங்கப்பட்டது.

அதில், முதல் பரிசை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் பெற்றுள்ளது. இந்த விருதினை அக்காவல்நிலைய ஆய்வாளருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வழங்கி கவுரவித்தார். 2-ம் இடத்தை தெலுங்கானா மாநிலம் பஞ்சகுட்டா காவல்நிலையமும், 3-வது இடத்தை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குடும்பா காவல்நிலையமும் பிடித்தது. 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...