இந்தியாவில் முதன்முறையாக ஓஃபோ நிறுவனத்தின் மிதிவண்டி அறிமுகம்

கோவை, ஜனவரி 06

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவில் முதன் முறையாக ஓஃபோ (Ofo)  நிறுவனத்தின் மிதிவண்டி அறிமுகம் செய்யப்பட்டது.

மொபைல் பயன்பாட்டின் மூலம் இயக்கப்படும் உலகின் முதன்மையான மிதிவண்டி அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, கல்லூரி வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட மிதிவண்டிகள் பயன்படுத்தப்படும். வளாகத்தில் எளிதாகச் செல்லும் பாதையில் மிதிவண்டிகள் கிடைக்கும். எந்த நிறுத்துதல் நிலையங்களும் தேவையில்லை. ஓஃபோவின் மிதிவண்டிகள் பகிர்வு பயனர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.

ஸ்ரீ சங்கர் வாணவராயர், இணை தாளாளர், கேசிடி சிறப்பு விருந்தினரையும், ஓஃபோ நிறுவனத்தையும் மற்றும் கேசிடி ஊழியர்களையும் வரவேற்றார்.  கோவை மாநகராட்சி ஆணையர் கே. விஜயகார்த்திகேயன் இந்நிகழ்ச்சியை துவங்கிவைத்தார். 

”இந்த ஆரோக்கியமான கருத்தை நாம் இப்போது ஒரு சிறிய அளவில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் தொடங்கியுள்ளோம், இந்த மாதிரியை நகருக்குள் பிரதிபலிக்கும் திட்டங்களை நாங்கள் கொண்டுள்ளோம். இந்த முயற்சி காற்று மாசு படுவதை குறைக்கும்”  என கோவை மாநகராட்சி ஆணையர் கே. விஜயகார்த்திகேயன் கூறினார். 

பொதுக்கொள்கை மற்றும் தகவல் தொடர்பு இயக்குநரான ரஜர்ஷி சஹாய் கூறுகையில், "குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் எங்கள் மிதிவண்டி பயன்படுத்தப்படுவதைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஜனவரி மாதம் தொடங்கி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஒரு சுத்தமான மற்றும் ஆரோக்கியமான போக்குவரத்து விருப்பத்தை வழங்கும். இந்தத் திட்டம் மூலம், மக்களுக்கு 'சுலபமாகப் பயன்படுத்தக்கூடிய' மிதிவண்டி பகிர்வு அனுபவத்தின் மூலம் மக்களுக்கு வழங்குவதோடு, மிதிவண்டி ஓட்டுதல் தொடர்பான பல்வேறு நன்மைகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் விரும்புகிறோம். கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசிடம் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் மிதிவண்டியினை பயன்படுத்த எந்தக் கட்டணமும் இல்லை”. கூறினார்.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...