கழிவு நீரை இயற்கையான முறையில் தூய்மையான நீராக மாற்றி கல்லூரி மாணவர்கள் சாதனை

கோவை, ஜனவரி 06

வீட்டு உபயோக கழிவுநீரை, பயோ பில்டர் முறையில் மீண்டும் தூய்மை நீராக மாற்றி ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 



ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டு நாட்கள் வேளாண் கண்காட்சி இன்று தொடங்கியது. இதில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கள் படைப்புகளைக் கண்காட்சியில் வைத்திருந்தனர். இதில், அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் வகையில், அக்கல்லூரியைச் சார்ந்த இரண்டாம் ஆண்டு பயோ டெக்னாலஜி பிரிவியைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய பயோ பில்டர் அமைந்திருந்தது.

வீட்டு உபயோக கழிவுநீர்களான துணி துவைக்கும் நீர், பாத்திரங்கள் கழுவும் நீர், வீட்டைத் துடைக்கும் நீர் என இது போன்ற கழிவு நீர்களை மீண்டும் தூய்மை நீராக மாற்றி, இதே வேலைகளுக்கு மீண்டும் பயன்படுத்த உபயோகப்படுத்துவதுதான் இந்த பயோ பில்டரின் வேலை.

இதனை ஆர். அபிஷேக், ஆர். பிரியதர்ஷினி மற்றும் பி. வேதா ஆகிய மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த பயோ பில்டரில் இந்த கழிவுநீர்களை செலுத்தினால் அது தூய்மை நீராக மாறிவிடும். 

இது குறித்து ஆர்.அபிஷ்ய் கூறுகையில், "இந்த பயோ பில்டரில் அருகம் புல், கூலன் கல், மண், வெட்டி வேர் மற்றும் நிலக்கரி ஆகியவை ஒன்றில் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்படும். முதலாவதாக வீட்டு உபயோக கழிவு நீர்களை இந்த பில்டரில் செலுத்தும்முன் சோப்பு நுரை, எண்ணெய் பசை கொண்ட நீர்களை சில கெம்பிகள் கொண்டு அதனை நீக்க வேண்டும். அதன்பின், இந்த நீரினை பயோ பில்டரில் செலுத்தினால் தூய்மையான நீராக அது வடிகட்டிவிடும்.

சோப்பு நுரை, எண்ணெய் பசை போன்றவை மிகவும் கடினமானவை. அதனைப்போக்க நச்சு பொருட்கள் கலக்காத கெமிக்கல்கள் உபயோகிக்க வேண்டியது அவசியம். அதன்பின் பில்டர், அதில் உள்ள கேட்டதை நீக்கி விடும். இதில், சாதாரணமாக வண்டி கழுவும் நீர் போன்றவை நேரடியாக இந்த பயோ பில்டரில் செலுத்தலாம்," என்றார்.

மேலும் அவர் கூறுகையில், உலகில் உள்ள மொத்த நீரில் வெறும் 0.01 சதவிகித நீர்தான் சுத்தமான நீராக உள்ளது. அதனைப் பாதுகாக்கவே இந்த முயற்சி. என்றார். 

இது போன்ற பயோ பில்டர்களை வீட்டில் உருவாக்க ஒருநாள் மட்டுமே போதும் வெறும் ஐந்தாயிரம் ரூபாய் செலவில் இதனை செய்திவிடலாம் என்கின்றனர் மாணவர்கள். அதேபோல, அருகம் புல், வெட்டி வேர் போன்றவைகள் கேட்டுப் போய்விடும் என்பதால், அதனை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் அளவில் இதனை வடிவமைத்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

கண்காட்சியில் கவர்ந்த இந்த பயோ பில்டர் குறித்து பார்வையாளர்கள் கூறுகையில், நீரின் அவசியம் குறித்து இந்த பயோ பில்டர் பயன் உள்ளதாக இருக்கிறது. நீரினை வீணாக்காமல் மீண்டும் அதனை இயற்கை வழியிலேயே பயன்படுத்தும் இந்த முறை மிகவும் சிறந்தது. என்றனர்

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...