கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு எ.ஐ.டி.யு.சி.யினர் ஆர்ப்பாட்டம்


கோவை, ஜனவரி 05

தொழிலாளர்கள் பிரச்சனைகளை தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறையும் அலட்சியப்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய எ.ஐ.டி.யு.சி.யினர், கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தொழிலாளர்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட தொழிலாளர் நலத்துறை தொழிலாளர்களின் பிரச்சனைகள் தொடர்பாக தீர்வு காணாமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவும், தமிழக அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை ஏ.ஐ.டி.யு.சி.யினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில், 480 நாட்கள் பணியாற்றும் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், நலவாரியம் மற்றும் மாநில ஆலோசனை வாரியரங்களில் முத்தரப்பு குழு அமைக்க வேண்டும், வாரிய நிதிபலன் தொகையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசையும், தொழிலாளர் நலத்துறையையும் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...