ப்ரோஷோன் மாலில் 3 நாள் நடக்கும் ”அங்காடி-18” மாபெரும் ஷாப்பிங் திருவிழா தொடக்கம்

கோவை, ஜனவரி 05

இளைஞர்களிடையே தொழில் முனையும் ஆர்வத்தையும், திறமைகளையும் மேம்படுத்தும் நோக்கில் கோவை ப்ரோஷோன் மாலில் 3 நாள் நடக்கும் மாபெரும் ஷாப்பிங் திருவிழா தொடங்கியது. 



 

கேசிடி மேலாண்மைத் துறை மாணவர்களால் அனைத்து தொழில் மேலாண்மையியல் மாணவர்களுக்காகவும் நடத்தப்படும் விற்பனைத் திருவிழாவே அங்காடி-18 ஆகும். இது இன்று முதல் 7-ம் தேதி வரையில் ஸ்வாரஸ்யமான முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது பங்கேற்கும் மாணவர்களின் எண்ணங்களுக்கு உயிரூட்டும் தளமாகவும், சுயதொழில் செய்வதன் சாதக, பாதகங்களின் அனுபவ அறிவைப் பெற்று, அதன் மூலம் வியாபார யுக்திகளால் லாபம் ஈட்டும் களமாகவும் திகழும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

அங்காடி-18-ஆனது பல்வேறு உணவு வகைகள், சிறுவர்களுக்கான கேளிக்கை நிகழ்வுகள், திறன் கொணர் போட்டிகள், இயற்கை சார்ந்த பொருட்கள், உடைகள், அணி மணிகள், வீடு உபயோக பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் என பலதரப்பட்டவற்றின் விற்பனை நிலையமாக 10,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இங்கு வெவ்வேறு பிஸினஸ் பள்ளி (BUSINESS SCHOOL)  மாணவர்கள் பங்கெடுப்பதால், அவர்கள் தங்களது வியாபார யுக்திகளை மேம்படுத்தவும், வெளிப்படுத்தவும் அங்காடி ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்.

கேசிடி மேலாண்மைத் துறை என்பது குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியின் ஒரு அங்கமாகவும், சமூக அக்கறை கொண்ட தொழில் முனைவோர்களையும், முன்னோடிகளையும் உற்பத்தி செய்யும் மையமாகவும் திகழ்கிறது. இந்நாள்வரை குமரகுரு கல்லூரி வளாகத்திற்குள்ளாகவே நடைபெற்ற அங்காடி நிகழ்வானது, முதன்முறையாக கல்லூரிகளுக்கிடைப்பட்ட நிகழ்வாக, பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் கோவை ப்ரோஷோன் மாலில் நடைபெற உள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக அங்கேயே பெரிய அளவில் கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

வெவ்வேறு விதமான 75 விற்பனையகங்கள் மூலம் பங்கெடுக்கும் மாணவர்களுக்கு, தொழில் முனையத் தேவையான திறன்களை ஊட்டி, வியாபார நேர்த்திகளைக் கற்பிப்பதே அங்காடி-18ன் சீரிய நோக்கமாகும்.

இந்த மாபெரும் விற்பனைத் திருவிழாவானது மூன்று நாட்களிலும் காலை 11 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணி வரையிலும் நடைபெறும். அனுமதி அனைவருக்கும் இலவசம். இந்நிகழ்வை வருகையாளர்களுக்கு என்றென்றும் பசுமையான நினைவாக்கும் வகையில், அங்காடியானது, கோவை விழா அமைப்போடு கைகோர்த்து செயலாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...