நீலகிரி, ஜனவரி 05
நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியி்ல் முடிந்ததால், நேற்று மாலை முதலே தமிழகம் முழுவதும் பெரும்பாபலான பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. இந்த நிலையி்ல், நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர், கோத்தகிரி, கூடலுார் பகுதியில் நேற்று மாலையில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் தாங்கள் செல்லவிருந்த பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
இந்த நிலையில், இன்று காலை முதலே குன்னுார், உதகை, கோத்தகிரி, கூடலுார் பணிமனையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் வாகனங்கள் வெளியே எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், சுற்றுலா பயணிகள் கிராமப் பகுதிக்கு செல்லும் ஆதிவாசி மக்கள், கல்லுாரி மாணவ, மாணவிகள் தேர்வு எழுத முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும், போக்குவரத்து ஊழியர்கள் ஒரே இடத்தில் குவிந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் பேருந்த நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரிக்கு பேருந்து கிடைக்காததால் மாணவ, மாணவிகள் திரும்பி வீட்டிற்கு சென்றனர்.