மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் டிப்பர் லாரி மோதி விபத்து : 40 ஆடுகள் பலி

கோவை, ஜனவரி 04

கோவை அருகே மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் கூட்டத்திற்குள் புகுந்து விபத்துள்ளானதில் 40 ஆடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அருகேயுள்ள கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், ராஜேந்திரன் உள்ளிட்ட 5 பேர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இன்று 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்ச்சலுக்காக பாப்பம்பட்டி பகுதிக்கு, பீடம்பள்ளி வழியாக ஓட்டி சென்றனர். அப்போது, மண்ணை அதிக பாரத்துடன்  ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஏதிரே வந்துள்ளது. சாலையில் ஆடுகளைப் பார்த்ததும் லாரி ஒட்டுநர் வண்டியை நிறுத்த முற்பட்டுள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆடுகள் கூட்டத்திற்குள் நுழைந்து விபத்துள்ளானது. இதில், 40 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 23 ஆடுகள் படுகாயமடைந்தன. 

இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ. 6 இலட்சம் வரை இருக்குமென உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...