யானைகள் புத்துணர்வு முகாம் நாளை துவக்கம்- உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்ற கல்யாணி

மேட்டுப்பாளையத்தில் நாளை (ஜன. 4) துவங்க உள்ள யானைகள் நலவாழ்வு முகாமில் கலந்துகொள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி இன்று கோவிலில் இருந்து வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை, ஜனவரி 3

மேட்டுப்பாளையத்தில் நாளை (ஜன. 4) துவங்க உள்ள யானைகள் நலவாழ்வு முகாமில் கலந்துகொள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி இன்று கோவிலில் இருந்து வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் நாளை யானைகள் நலவாழ்வு முகாம் துவங்க உள்ளது. யானைகளுக்கு புத்துணர்வை அளிக்கும் வகையில் இந்த முகாம் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோவில் யானையான கல்யாணி இன்று புறப்பட்டுச் சென்றது. 26 வயதாகும் கல்யாணி காலை குளிக்க வைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டது.

கோவிலின் உள்ளே யானைக்கு மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் லாரியில் பாதுகாப்பாக தேக்கம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதேப்போன்று, தமிழகம் முழுவதுமுள்ள கோவில் திருப்பணிகளில் ஈடுபடும் யானைகளுக்கு அந்தந்த கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...