அடையாள அட்டை உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் பணி புறக்கணிப்பு போராட்டம்

கோவை, ஜனவரி 3

நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யும் போது, வழக்கறிஞர் அடையாள அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று முதல் காலவரையற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யும் போது, அதில் ஆஜராகும் வழக்கறிஞரின் அடையாள அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்திரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த உத்திரவினை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காலவரையற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கோவையில் 3000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...