ஜெயலலிதா உடலை எம்பால்மிங் செய்த மருத்துவர் சுதா சேஷய்யன் விசாரணை ஆணையத்தில் ஆஜர்

ஜனவரி 3

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலை எம்பால்மிங் செய்த மருத்துவர் சுதா சேஷய்யன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதாவின் உறவினர்கள், உடன் வசித்தவர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி அவர்களிடம் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் 10 நாளில் விளக்கம் அளிக்கவும், சசிகலா 15 நாளில் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல, ஜெயலலிதாவின் உடலை எம்பால்மிங் செய்த சென்னை மருத்துவக் கல்லூரி துணைத்தலைவர் பேராசிரியர் மருத்துவர் சுதா சேஷய்யன் ஜனவரி 3-ம் தேதி ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, மருத்துவர் சுதா சேஷய்யன், எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் இன்று காலை ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்பல்லோ மருத்துவர் சத்யபாமா நாளை (ஜனவரி 4-ந் தேதி) ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, அவரது கன்னத்தில் சிறிய அளவில் நான்கு துவாரங்கள் காணப்பட்டன. இது கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. பல நாட்களுக்கு முன்னதாகவே ஜெயலலிதா இறந்துவிட்டதால் உடல் எம்பால்மிங் முறையில் பதப்படுத்தியிருப்பதாக பேசப்பட்டது.

இதுபற்றி விளக்கம் அளித்த மருத்துவர் சுதா சேஷய்யன், தட்பவெட்ப சூழல் காரணமாக உடல் கெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், ஜெயலலிதா இறந்தபின்னர் அவரது உடல் எம்பால்மிங் செய்யப்பட்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...