அரசியலுக்கு வருவது உறுதி, தனி கட்சி தொடங்குவேன்: நடிகர் ரஜினிகாந்த்


டிசம்பர் 31

தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக ரசிகர்களை சந்தித்து பேசி வரும் ரஜினி, இன்று கடைசி நாளில் ரசிகர்கள் மத்தியில் உரையாற்றினர். அப்போது அவர் பேசுகையில்,  அரசியலுக்கு வருவதில் எனக்கு பயமில்லை. ஊடகங்களை கண்டு மட்டுமே பயம்.  நான் அரசியலுக்கு வருவது உறுதி.

தனி கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன். நேரம் குறைவாக இருப்பதால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. நான் அரசியலுக்கு வருவது காலத்தில் கட்டாயம்.

பழைய காலத்தில் ராஜாக்கள் அண்டை நாடுகளில் கொள்ளையடித்தனர். ஆனால் தற்போது சொந்த நாட்டிலேயே அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கின்றனர். இதனை தடுக்கும் விதமாக காவலர்கள் (தொண்டர்கள்) எனக்கு வேணும். அவர்களை செயல்பட வைக்கும் பிரஜையாக மட்டுமே நான் இருப்பேன். மாநிலம் முழுவதும் நமது மன்றங்கள் திறக்கப்பட வேண்டும். மன்றங்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள பெண்கள், இளைஞர்களை இணைக்க வேண்டும்

வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நமது செயல்திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சென்றடைய செய்ய வேண்டும். அறிவிக்கப்படும் திட்டங்களை செயல்படுத்தா விட்டால் 3 ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன். இவ்வாறு கூறினார்.

Newsletter

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...