சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளை மூட நடவடிக்கை எடுக்காவிடில் முற்றுகைப் போராட்டம்: திமுக

கோவை, டிசம்பர் 30

கோவை - திருச்சி சாலையில் உள்ள நஞ்சப்பா நகர் குடியிருப்பில் கேபிள் பதிக்க தோண்டப்பட்டு ஒரு மாதமாக மூடப்படாமல் இருக்கும் குழிகளை உடனடியாக மூடாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான நா.கார்த்திக் தெரிவித்துள்ளார். 

கோவை - திருச்சி சாலையில், குளத்தேரி அருகே நஞ்சப்பா நகர் குடியிருப்பு பகுதியில், கேபிள் பதிக்க தனியார் நிறுவனம் (ஏர்டெல்) மாநகராட்சியிடம் டெண்டர் எடுத்துள்ளது. இந்தப் பகுதியில் கேபிள் பதிக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழி தோண்டியுள்ளனர். இந்தப் பணிகள் முடிந்தும், தெருக்களில் உள்ள குழிகள் 2 மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால், குடிநீர் குழாய்கள் உடைந்ததாலும், குடிநீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுதொடர்பாக சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ-விடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, எம்எல்ஏ நா.கார்த்திக் நஞ்சப்பா நகர் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்கள் அவரிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து, எம்எல்ஏவின் வருகை குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், டெண்டர் எடுத்த நிறுவனமும் வருத்தம் தெரிவித்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக குழியை மூடுவதாக உறுதியளித்தனர். 



இதுதொடர்பாக எம்எல்ஏ நா.கார்த்திக் கூறுகையில், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இப்பகுதியில் குழி தோண்டப்பட்டு கிடக்கின்றது. இதேபோல, மாநகராட்சியில் பல பகுதிகள் இதே நிலையில் தான் உள்ளது. நஞ்சப்பா நகரில் உள்ள இந்த குழிகளை உடனடியாக மூடுவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். என்றார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...