சிறுதுளி அமைப்பின், ஐம்பதாயிரமாவது மரக்கன்று நடும்விழா


கோவை, டிசம்பர் 30

சிறுதுளி அமைப்பின் சார்பாக நடத்தப்படும் ‘சிறுவாக்கி காடு வளர்ப்பு திட்டத்தின்’ ஐம்பதாயிரமாவது மரக்கன்று, சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் திருமதி. வனிதா மோகன் அவர்களால், மருதமலை சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தில் இன்று நடப்பட்டது.



இவ்வளாகத்தில், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவாக ‘கலாம் வனம்’ என்ற பெயரில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை, சிறுவாக்கி என்னும் நடவு முறையில் நட்டு வளர்க்க, சிறுதுளி அமைப்பினர் திட்டமிட்டனர். அதனைத்தொடர்ந்து புங்கன், பூவரசு, சிவப்புசந்தனம், இயல்வகை, இலுப்பை, தூங்குவாகை, மகாகனி, ஈட்டி, யானை, குன்றுமணி, வாகை, மஞ்சள்கொன்றை, சரக்கொன்றை, குமிழ், மலைவேம்பு மற்றும் புன்னை போன்ற மரவகைகள் நடப்பட்டன.



ஒரு லட்சம் மரக்கன்றுகளை நோக்கி நடத்தப்படும் இந்நிகழ்வில், சிறுதுளி அமைப்பின் உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.



 சிறுதுளி அமைப்பின் இந்த திட்டத்திற்கு ஏராளமான நாற்றுகள் தேவைப்படுவதால், ‘விதையிலிருந்து விருட்சம்’ என்ற திட்டத்தை கிராம மற்றும் நகர்புற பள்ளி மாணவர்களின் ஒத்துழைப்போடு நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளனர். இதில், நாற்றுகளை உருவாக்குவதற்கான செயல்முறை பயிற்சி மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. விதைகள், தாய்மண், உரம் அதற்கான பை ஆகியன வழங்கப்பட்டு, நாற்றுகளாக உருவாக்கி பராமரித்து சிறுதுளி அமைப்பினரிடம் மாணவர்கள் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக, சிறுதுளி அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...