டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலி : தென்னிந்தியாவில் கூட்டத்தொடரை நடத்த அதிமுக எம்பி வலியுறுத்தல்

காற்று மாசுபட்டால் டெல்லி பாதிக்கப்பட்டுள்ளதால்ந, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை தென்னிந்திய நகரங்களில் ஒன்றுக்கு மாற்ற வேண்டும் என அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசினார். 

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்  நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில்  மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசினார்.  

அப்போது அவர் கூறியதாவது:- தலைநகர் டெல்லி மிகவும் மாசடைந்துள்ளது. இதனால், இங்கு வசிப்பவர்கள் ஒருவித பயத்துடன் வாழ்கிறார்கள். இப்படியே போனால் மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக டெல்லி மாறிவிடும்.

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 48 ஏ-வின்படி, மாசுபாட்டைத் தடுத்து சுற்றுச்சூழலை மேம்படுத்தி, வனங்களையும் வனச்சூழலையும் பாதுகாப்பது அரசின் கடமையாகும். சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பும் இதை உறுதி செய்திருக்கிறது. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை தென்னிந்திய நகரங்களில் ஒன்றுக்கு மாற்ற வேண்டும். இதன்மூலம் நமது வட இந்திய நண்பர்கள் மாசுபாடற்ற சூழலை அனுபவிக்க இயலும். அமைதியான மற்றும் ஆக்கபூர்வமான கூட்டத்தொடராக அமையவும் இது வழிவகுக்கும். நாக்பூர், பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் ஏதேனும் ஒரு கூட்டத்தொடரை நடத்துவது தேசிய ஒருமைபாட்டுக்கும் நன்மை பயக்கும்” என்றார். 

உச்ச நீதிமன்றத்தை நாக்பூர் நகருக்கு மாற்ற வேண்டுமென்று அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் கோரிக்கை வைத்ததையும் நவநீதகிருஷ்ணன் நினைவுகூர்ந்தார். இந்த விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன், “மாசுபாடு தொடர்பான தகவல்கள் பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டவையாக உள்ளன. விஞ்ஞானம்தான் உண்மையான பதிலை அளிக்க வேண்டும்” என கூறினார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...