தமிழ் புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்: தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

கோவை, டிசம்பர் 29

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவையொட்டி மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் விளையாட்டு போட்டிகள் நடத்தி கொண்டாடுவது என மாநகர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாநகர் திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் வெ.நா.பழனியப்பன் தலைமையில் கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான நா.கார்த்திக் முன்னிலை வகித்தார். 

இந்தச் செயற்குழு கூட்டத்தில், ஆர்.கே.நகர் தொகுதியில் மிகச் சிறப்பான முறையில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வது, இந்த இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்களை பிடித்து கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் செயலற்று கிடந்ததை வன்மையாகக் கண்டிப்பது, வருகின்ற தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவையொட்டி தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளை மாவட்டம் முழுவதும் கழகக் கொடியை கட்டி அனைத்து வட்டங்களிலும் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், கோவை மாநகராட்சி பகுதிகளில் பல பகுதிகளில் பூங்காக்கள் பராமரிப்பு, சாலைகளை மேம்படுத்துதல், எரியாத 10 ஆயிரம் மின் விளக்குகளை சரிசெய்தல், இருகூர் ரயில்வே உயர்மட்ட மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாதது போன்ற பிரச்சினைகளை போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வலியுறுத்துவது, கோவை மாநகராட்சி பகுதியில் உடனடியாக புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும், கோவை மாவட்டம் முழுவதும், ஏழை - எளிய குடும்பங்களை சேர்ந்த வறுமைகோட்டிற்கு கீழே வாழ்கின்ற முதியவர்கள், கணவனை இழந்தவர்களுக்கு, மாற்று திறனாளிகள், முதியோர் என அரசின் உதவி தொகைகள் வழங்காமல் கடந்த ஒன்னறை ஆண்டுகளாக உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் செயற்குழு கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை விரும்பி, மாவட்ட துணைச்செயலாளர்கள் சிங்கை ரவிச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் உமா மகேஷ்வரி, பகுதி கழக செயலாளர்கள் சுந்தரம், எஸ்.எம்.சாமி, மாவட்ட அணி அமைப்பாளர்கள், தளபதி இளங்கோ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...