மாதந்தோறும் சிலிண்டர் விலையை உயர்த்தும் முடிவை ரத்து செய்தது மத்திய அரசு

மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற்று கொண்டது.

டிசம்பர் 28

மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற்று கொண்டது.

கடந்த ஜூலை 2016 முதல் எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் ரூ.2 உயர்த்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. கேஸ் மீதான மானியம் ரத்தாகும் வரை விலை உயர்த்த அனுமதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கேஸ் சிலிண்டர் மீது 10 முறை விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2017 ஜூன் 1 முதல் காஸ் சிலிண்டர் விலை, அரசு அனுமதியுடன் மாதம் ரூ.4 உயர்த்தப்பட்டது. 2018 மார்ச் வரை விலையை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விலை உயர்த்திக் கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை, மத்திய அரசு திரும்ப பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தில்லி வட்டாரங்கள் கூறுகையில், மாதந்தோறும் விலை உயர்த்தியது மக்கள் மத்தியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் ஏழை மக்களுக்கு இலவச கேஸ் இணைப்புகளை வழங்கிவிட்டு மறுபுறம் விலை, மாதந்தோறும் உயர்த்தப்படுவதாக பேச்சு எழுந்தது. இதனையடுத்து, விலையை உயர்த்துவது ரத்து செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிறகு, விலை உயர்த்தப்படவில்லை. வரி காரணமாகவே தற்போது விலை உயர்த்தப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...