”டிச., 31-ம் தேதி நள்ளிரவு கோவில்களை திறக்கத் தடையில்லை”

புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோவில்களை திறக்கத் தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

டிசம்பர் 28

புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோவில்களை திறக்கத் தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அஸ்வத்தாமன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:- சைவ கோவில்கள் சிவராத்திரி அன்றும், வைணவ கோவில்கள் வைகுண்ட ஏகாதசி அன்றும் இரவு முழுவதும் திறந்து இருக்க வேண்டும். மற்ற நாட்களில், ஆகம விதிகளின் படி இரவு நேரத்தில் கோவில்கள் திறந்து வைக்கக்கூடாது. இரவு நேரங்களில் காற்றில் பிராணவாயுவின் அளவு குறைவாக இருக்கும் என்பதால், அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் கோவில் நடையைத் திறக்க வேண்டும். காலகாலமாக நம் மூதாதையர் இந்த நடைமுறையை உருவாக்கி பின்பற்றி வருகின்றனர். 

ஆனால், அண்மைக் காலங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்து கோவில்கள் இரவு முழுவதும் திறந்து வைக்கப்படுகிறது. இதற்குத் தடை விதிக்க வேண்டும். இரவு நேரத்தில் கோவில்களை திறக்கக் கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகி, ’இந்து கோவில்களை இரவு முழுவதும் திறந்து வைப்பது என்பது ஆகம விதிகளுக்கு எதிரானது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பல இந்து கோவில்கள் இரவு முழுவதும் திறந்து வைக்கப்படுகிறது. அதுவும், இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களும் ஆகம விதிகளுக்கு எதிராக திறந்து வைக்கப்படுகிறது. கோவில்களை இரவு நேரங்களில் திறக்கக்கூடாது என்பதற்கு பல அறிவியல் ரீதியான காரணங்களும் உள்ளன’ என்று வாதிட்டார். 

அதற்கு நீதிபதிகள், புத்தாண்டை முன்னிட்டு இரவு நேரங்களில் கோவில்களை திறப்பது என்பது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 

இந்த நிலையில், கடைசி நேரத்தில் இந்த வழக்கை ஏன் தொடர்ந்துள்ளீர்கள்? எனவே, புத்தாண்டை முன்னிட்டு, இந்து கோவில்களை திறக்க இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது. இந்த வழக்கை வருகிற ஜனவரி 8-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன். அதற்குள் தமிழக இந்து சமய அறநிலையைத் துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...