எஸ்விஎஸ் கல்லூரியில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

கோவையில் உள்ள எஸ்.வி.எஸ். கல்லூரியில் இன்று 2வது நாளாக வருமான வரி சோதனை நடந்து வருகிறது.

கோவை, டிசம்பர் 28

கோவையில் உள்ள எஸ்.வி.எஸ். கல்லூரியில் இன்று 2வது நாளாக வருமான வரி சோதனை நடந்து வருகிறது.

‘ஆபரேஷன் கிளீன் மணி’ என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்யும், நிறுவனங்கள் மற்றும் போலி நிறுவனங்கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சென்னை, கோவை நகரங்களில் 6 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சென்னை அடையார் கற்பகம் கார்டனில் உள்ள சசிகலாவின் அண்ணி இளவரசியின் மருமகன் கார்த்திகேயனின் இல்லத்துக்கு நேற்று காலை 6 மணி அளவில் வருமான வரி அதிகாரிகள் 6 பேர் 2 கார்களில் வந்தனர். அவர்கள் அங்கு சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனை இரவு வரை நீடித்தது.

மிடாஸ் நிறுவனத்துக்கு அட்டைப் பெட்டி சப்ளை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெகநாதனின் வீடு அதே பகுதியில் உள்ளது. கார்த்திகேயனின் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருக்கும் போது 3 அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்று சோதனை நடத்திவிட்டு, பின்னர் மீண்டும் கார்த்திகேயனின் வீட்டுக்கு வந்தனர். மண்ணடியில் உள்ள கார்த்திகேயனின் நண்பருக்கு சொந்தமான குடோனிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலத்தில் போலீஸ் நிலையம் அருகே கேபிள் உள்ளிட்ட மின்சார சாதனங்கள் சேமித்து வைக்கும் ஸ்ரீசாய் குடோனுக்கு நேற்று காலை 10.30 மணிக்கு வருமான வரி அதிகாரிகள் 7 பேர் 2 கார்களில் வந்தனர். அங்கு அவர்கள் மாலை 6 மணி வரை சோதனை நடத்தினார்கள்.

ஏற்கனவே, கடந்த நவம்பர் மாதம் அந்த பகுதியில் உள்ள, மிடாஸ் மதுபான ஆலைக்கு அட்டைப் பெட்டிகள் சப்ளை செய்யும் ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ், ஸ்ரீசாய் கார்ட்டன்ஸ் என்ற இரு நிறுவனங்களில் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஸ்ரீசாய் குடோனில் சோதனையை முடித்துக் கொண்டு வருமான வரி அதிகாரிகள் படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலைக்கு சென்றனர். நவம்பர் மாதம் மிடாஸ் மதுபான ஆலையில் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் அங்குள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைத்து இருந்தனர். அதிகாரிகள் நேற்று அந்த அறையைத் திறந்து ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

கோவையை அடுத்த மயிலேறிபாளையத்தில் எஸ்.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் உரிமையாளர் சந்திரசேகர். இவர் மிடாஸ் நிறுவனத்துக்கு காலி பாட்டில்கள் சப்ளை செய்து வருகிறார். இந்த நிலையில், 5 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் நேற்று காலை எஸ்.வி.எஸ். கல்லூரிக்குச் சென்று சோதனை நடத்தினர். மாலை வரை நீடித்த இந்தச் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. 

இந்த நிலையில், எஸ்.வி.எஸ். கல்லூரியில் இன்று 2வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

Newsletter

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...