டிசம்பர் 26
படுகர் இன மக்களின் பாரம்பரியமான கெத்தையம்மன் கோயில் திருவிழாவையொட்டி வரும் ஜனவரி 3-ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் இன மக்களின் பாரம்பரியமான கெத்தையம்மன் கோயில் திருவிழாவையொட்டிஸ்ரீ ஹெத்தையம்மன் பண்டிகை நடைபெறும் நாளன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்ததற்கு ஏற்ப, வரும் ஜனவரி 3ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881-ல் வராது என்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும் போது மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இதற்கு பதிலாக வரும் ஜனவரி 20-ம் தேதி சனிக்கிழமையன்று மாவட்டத்தில் பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.