டிசம்பர் 26
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உதகை நகரில் சில முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகையில் வரும் 30-ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, உதகை நகரில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம், சில முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கூடலூர் மற்றும் மசினகுடி ஆகிய இடங்களில் இருந்து தலைகுந்தா வந்தடையும் அனைத்து வாகனங்களும் தலைகுந்தா மட்டம், குளிச்சோலை, கோழிப்பண்ணை, மார்லிமந்து, புதுமந்து வழியாக ஸ்டீபன் சர்ச் வந்தடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் இருந்து நூற்றாண்டு விழா பந்தல் மேடைக்கு வரவுள்ள பயனாளிகளும், கட்சி பிரமுகர்களும் பிங்கர்போஸ்ட், காந்தல் முக்கோணம், கஸ்தூரி பாய் காலனி, மினிபோட் ஹவுஸ், குட்ஷெப்பர்ட் பள்ளி, பர்ன்ஹில் ஜங்ஷன், தாமஸ் சர்ச் வழியாக எட்டின்ஸ் ஜங்ஷன், முருகன் லாட்ஜ் நுழைவாயில் வழியாக ரேஸ்கோர்ஸ் வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குன்னூர் பகுதியில் இருந்து வரவுள்ள கட்சி பிரமுகர்களும், பயனாளிகளும் லவ்டேல் ஜங்ஷனில் இருந்து காந்திபேட்டை, மஞ்சனக்கொரை வழியாக எமரால்டு சாலை வந்தடைந்து, பர்ன்ஹில் ஜங்ஷன், தாமஸ் சர்ச் ஜங்ஷன் வழியாக முருகன் லாட்ஜ் நுழைவுவாயில் வழியாக ரேஸ்கோர்ஸ் வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மஞ்சூர் பகுதியில் இருந்து வரவுள்ள கட்சி பிரமுகர்களும், பயனாளிகளும், பைகமந்து வழியாக முத்தொரை, பாலாடா வந்து பர்ன்ஹில் ஜங்ஷன், தாமஸ் சர்ச் ஜங்ஷன் மார்க்கமாக முருகன் லாட்ஜ் நுழைவுவாயில் வழியாக ரேஸ்கோர்ஸ் வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோத்தகிரி தொட்டபெட்டா வழியாக வரவுள்ள கட்சி பிரமுகர்களும், பயனாளிகளும் சேரிங்கிராஸ், கமர்ஷியல் ரோடு, காபி ஹவுஸ், மணிக்கூண்டு ஏடீசி வந்தடைந்து ஏடிசி ஜங்ஷன் வழியாக உள்ள நுழைவு வாயில் வழியாக ரேஸ்கோர்ஸில் உள்ள நிகழ்ச்சி பந்தல் வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி ஏற்பாடுகள் வரும் 30-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு செய்யப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், நகரில் உள்ள எந்த ஒரு பகுதியிலும் ஆட்டோக்கள், டாக்ஸிகள், வேன்கள், பேருந்துகள், லாரிகள் ஆகியவை எந்தவொரு பகுதியிலும் நிறுத்த அனுமதிக்கப்படாது. உள்ளூர் பொதுமக்கள் போக்குவரத்து மாற்றங்களைத் தெரிந்து வாகன நெரிசலைக் குறைப்பதற்கு காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.