தாயைக் கொலை செய்த தஷ்வந்த்துக்கு 3 நாள் போலீஸ் காவல்

டிசம்பர் 09 

தாயைக் கொலை செய்துவிட்டு, தலைமறைவாக இருந்த கொலையாளி தஸ்வந்த்தை 3 நாள் போலீஸ் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை போரூரில் சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்தார். குன்றத்துாரில் 25 பவுன் நகைகளுக்காகப் பெற்ற தாயையே கொன்றுவிட்டு தஷ்வந்த் தலைமறைவாகினார். அவரைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. தஷ்வந்த் நண்பர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே, 5 நாட்கள் தலைமறைவாக இருந்த தஷ்வந்த்தை, மும்பையில் போலீஸார் டிசம்பர் 6-ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, மும்பை பந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தமிழகத்திற்கு அழைத்து வர முற்பட்டனர். அப்போது, மும்பை விமான நிலையம் அருகே தஷ்வந்த் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடினார். பின்னர், மும்பை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அனைத்துத் தகவலும் பகிரப்பட்டது. 

முக்கியப் பகுதிகளின் சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தேரி பகுதியில் தஷ்வந்த்தை போலீஸார் மீண்டும் கைது செய்தனர். 

இந்த நிலையில், அவரை போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க அனுமதி கோரினர். இதனை விசாரித்த நீதிபதிகள், தஷ்வந்தை 3 நாள் காவலில் எடுக்க அனுமதி வழங்கியதுடன், வரும் 12-ம் தேதி விசாரணைக்குப் பின்னர் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். இதனையடுத்து, இன்றிரவு தஷ்வந்த்தை சென்னை அழைத்து வர போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...