குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றித்திரியும் காட்டுயானைகள் - வாகன ஓட்டிகள் பீதி


டிசம்பர் 09

குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் பல்வேறு இடங்களில் காட்டுயானைகள் முகாமிட்டிருப்பதால், வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

நீலகிரி மாவட்டம் குன்னுார் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் தனியாருக்கும் சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வனத்துறையினருக்குச் சொந்தமான அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன. வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளில் காட்டெருமைகள், யானைகள் போன்ற வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி, தனியார் தேயிலைத் தோட்டங்களில் சுற்றித் திரிகின்றன. சில நேரங்களில் குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதைக்கு வந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில், குன்னுார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால், குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை ஓரத்தில் பசுமையான கோரை புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்தப் புற்களை உண்பதற்காக யானைகள் கூட்டம் கூட்டமாகப் படை எடுக்கத் துவங்கியுள்ளன. பர்லியார் பகுதியில் 2 காட்டுயானைகளும், ‌கோழிக்கரை கிராமத்தில் ஒற்றை யானையும், கே.என்.ஆர் பகுதியில் 3 காட்டுயானைகளும் முகாமிட்டுள்ளன. இந்தக் காட்டுயானைகள் எந்த நேரத்திலும் சாலைக்கு வரக்கூடும் என்பதால் வனத்து‌றையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாகன ஒட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...