ஆர்.கே நகர் தேர்தலில் தினகரனுக்கு ”நோ” தொப்பி - தேர்தல் ஆணையம்

டிசம்பர் 7

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படாது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நமது கொங்கு முன்னேற்றக் கழக வேட்பாளர் ரமேஷுக்கு தொப்பி சின்னம் வழங்கப்பட்டது.  

ஆர்.கே. நகரில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரன், தனக்குத் தொப்பி சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். ஆர்.கே. நகரில் மனு தாக்கல் செய்தவர்களில் 29 பேர் தொப்பி சின்னத்தைக் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை இன்று (டிச.,7) நடந்தது. அப்போது, நமது கொங்கு முன்னேற்றக் கழகம் கட்சி வேட்பாளர் ரமேஷ், எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் கேசவலு, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ரவி ஆகியோர் தொப்பி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனக் கேட்டனர். 

பதிவு செய்த கட்சிகள் கேட்டதால், சுயேட்சையாக போட்டியிடும் தினகரனுக்குத் தொப்பி சின்னம் ஒதுக்கப்படாது என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், நமது கொங்கு முன்னேற்றக் கழக வேட்பாளர் ரமேஷுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

இதனிடையே, ஆர்.கே. நகரில் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார். மதுசூதனனின் படிவம் B-ல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி என 2 பேர் கையெழுத்திட்டதால், இரட்டை இலை சின்னம் ஒதுக்கத் தினகரன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...