கோவையில் வெறும் ரூ. 4,999 யில் ரெட்மி 5A அறிமுகம்

கோவை, டிசம்பர் 6

இந்தியாவின் முதன்மையான ஸ்மார்ட்போன் பிராண்டான ஷவுமி நிறுவனம் கோவையில் ரூ. 4,999 -க்கு ரெட்மி 5எ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. 

ஷவுமி-யின் சமீபத்திய அறிமுகம் முதல் ஸ்மார்ட்போனை பெற நினைக்கும் பயனாளிகளுக்கு ஒரு முழுமையான அனுபவத்தை வழங்குகிறது. ரெட்மி 5எ-யின் குவால்காம்® ஸ்னாப்ட்ராகன்™ 425 க்வாட்-கோர் பிராசசர் மற்றும் 128 ஜிபி வரை விரிவாக்கக் கூடிய ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், இந்திய நுகர்வோருக்குச் சிறப்பாக தனிப்பயனாக்கப்பட்ட அம்சமாகும். 2 ஜிபி ரேம், 16 ஜிபி சேமிப்பு திறன் ரூ.5,999-க்கும், 3 ஜி பிரேம், 32 ஜிபி சேமிப்பு திறன் ரூ. 6,999-க்கும் வெளியாகிக் கொண்டிருக்கிறது.



இந்த ப்ராண்டை முதன்மையாக மாற்ற உதவிய எம்ஐ உபயோகிப்பாளர்களின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில், ஷவுமி 2 ஜிபி ரேம், 16 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட முதல் ஐம்பது லட்சம் போன்களை ரூ. 4,999-க்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. ரெட்மி 5எ மாடல் ஸ்மார்ட்போனானது, நாளை முதல் மதியம் 12 மணி முதல் ஃப்லிப் கார்ட், எம்ஐ.காம், மற்றும் எம்ஐ கடைகளில் கிடைக்கும். அதன்பின் தொடர்ச்சியான வாரங்களில் எம்ஐ விருப்பமான விற்பனையாளர்கள் உட்படச் சில்லறை விற்பனையாளர்களிடம் கிடைக்கும்.

இந்த சமீபத்திய அறிமுகத்துடன் கூடுதலாக, ஷவுமி சமீபத்தில் இது ஐடிசிஇன் சமீபத்திய காலாண்டு ஸ்மார்ட்போன் டிராக்கர், க்யூ3வின் படி, இந்தியாவில் முதலிடத்தில் உள்ள ஸ்மார்ட் போன் விற்பனையாளராக மாறியுள்ளது. 23.5 சதவீதம் சந்தை பங்களிப்புடன், ஒரு காலாண்டில் 92 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்று, ஆண்டு முழுவதும் ஆண்டுக்கு 300 சதவீதம் வளர்ச்சியைக் கொண்டிருக்கும் இந்நிறுவனம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆனது, சர்வதேச தரவுக்கூட்டு நிறுவனத்தின் (ஐடிசி) ஒரு புதிய அறிக்கையிலும் க்யூ3 2017-ல் ஷவுமி இந்தியாவின் முக்கிய 50 நகரங்களில் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனையாளராகும்.



ஷவுமியின் தெற்கு மற்றும் கிழக்கு, பிராந்திய தலைவர் சுனில் பேபி கூறுகையில், “ஷவுமி இந்தியாவில் ஸ்மார்ட்போன் பிரிவில் முதன்மைத்துவம் அடைய இந்தியாவிற்கான எங்களது அர்ப்பணிப்பே முக்கிய காரணமாகும். தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் உயர்தர பொருட்கள் எல்லோருக்கும் மிகவும் அணுகக் கூடியதாக இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். எங்கள் எம்ஐ பயனாளிகளிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட ஆதரவு மிகவும் உயர்வாக உள்ளதால், அவர்களுக்கு உயர்தொழில் நுட்பதொழில் நுட்ப கண்டுபிடிப்புகளை வழங்குவதற்கு முயற்சி செய்கிறோம். இங்கே எங்கள் பயணம் இப்போது தான் துவங்கியுள்ளது, மேலும், பல மைல்கற்களை உருவாக்குவதற்கு நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்றார்.

ரெட்மி ஒய் 1 மற்றும் ரெட்மி ஒய் 1 லைட் ஆகியவற்றைக் கொண்ட ரெட்மி ஒய் தொடர் தினமும் வழக்கமான வாழ்க்கை முறை அதிகரிக்கத் தொடங்கப்பட்டது. 

எம்ஐயுஐ 9 : மின்னல் வேகம் 220 க்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் 56 மொழிகளில் எம்ஐயுஐ- க்கு 28 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள் உள்ளனர். எம்ஐயுஐ 9 ஆனது பிளவுத் திரை, மேம்பட்ட அறிவிப்பு கீழிறக்கம், அதே போல் ஐகான் அனிமேஷன் மற்றும் பொருள் அகற்றும் ஸ்மார்ட்புகைப்பட எடிட்டிங் உடன் வருகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட அறிவிப்பு கீழிறக்கத்தில் பல பாணிகள், தொகுக்கப்பட்ட பயன்பாட்டு அறிவிப்புகள், அதே போல் விரைவான மறுமொழிகள் கீழ்தோன்றுதல் ஆகியவையும் அடங்கும்.

எம்ஐயுஐ 9 ஆனது, பஞ்சாங்க நாட்காட்டியடன், இந்தியாவில் 26 திருவிழாக்களுக்கான அட்டைகள், ஜாதகம், செய்திகள், கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அட்டவணை, கால்பந்து அட்டவணை, உடல் நலம் மற்றும் உடற் தகுதி, மற்றும் நாள் குறிப்புகள் ஆகியவற்றையும் வழங்குகிறது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...