பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் கூடா நட்பு கேடாய் முடியும் - எம்எல்ஏ தமிமுன் அன்சாரி

கோவை, நவம்பர் 27

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால், கூடா நட்பு கேடாய் முடியுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

கோவை வெள்ளலூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது  ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மனிதநேய ஜனநாயகக் கட்சி போட்டியிடாது. இத்தேர்தலில் எந்த கூட்டணிக்கும் ஆதரவு இல்லை. மேலும் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. தமிழக அரசு மத்திய அரசிற்கு பணிந்து, மாநில உரிமைகளை விட்டுக் கொடுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தால், கூடா நட்பு கேடாய் முடியும். 

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி ரகுபதி என்ற இளைஞர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...