ஆர்கே நகருக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் - இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு


நவம்பர் 24 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, காலியாக உள்ள ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவால், சென்னை, ஆர்கே நகர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்தத் தொகுதிக்கு, ஏப்ரலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்த வழக்கில், டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பக்கே கஸாங் மற்றும் லிகபல்லி, உத்தரபிரதேசத்தில் உள்ள சிகந்த்ரா, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சபாங் உள்ளிட்ட காலியானத் தொகுதிகளுக்கும் அதே நாளில் இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட 5 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 27-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் டிசம்பர் 4-ம் தேதி ஆகும். டிசம்பர் 5-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களைத் திரும்ப பெற டிசம்பர் 7-ம் தேதி கடைசி நாளாகும். வாக்குகள் டிசம்பர் 24-ம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்த இடைத்தேர்தலின் போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் ஒப்புகை சீட்டுடன் கூடிய இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...