அமைச்சர்களை விமர்சனம் செய்வதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜு

தமிழக அமைச்சர்களை கேவலமாக பேசுவதை எதிர் கட்சித்தலைவர் ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கோவையில் நடந்த கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சியில் வலியுறுத்தினார்.

கோவையில் மாநில அளவிலான 64 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாடைபெற்றது.இந்த விழாவில் ஊரக வளர்ச்சி் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சிறப்பாக நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.

எதிர்கட்சியினரின் எழுப்பும் கேள்விகளுக்கு புள்ளி விபரங்களுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்து வருகிறார் என தெரிவித்தவர், பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் முட்டையே போடபடுவதில்லை என எதிர்கட்சிதலைவர் சொல்வது தவறு எனவும் பள்ளிகளில் முறையாக முட்டை போடப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.கோவை மாவட்டத்திற்கு தேவையான கோரிக்கைகள் முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் வரும் 3ம் தேதி கோவையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் திட்டங்களை அறிவிக்க இருக்கின்றார் என தெரிவித்தார்.மேலும் திமுக ஆட்சியின் போது மழை காலங்களில் சென்னையில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது எனவும்,தற்போதய அதிமுக ஆட்சியில் மழை பெய்தால் உடனடியாக தண்ணீர் வெளியேற்ற படுகிறது அந்தளவு பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றது என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் கூட்டுறவு துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை பட்டியலிட்டார். பின்னர் பேசிய அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டு சென்ற பணியை விவசாய பிரதிநிதியாக இருந்து செய்து கொண்டு வருகிறேன் எனவும்,தமிழகத்திலேயே ஒரே துறையில் ஏழு ஆண்டுகள் வரை பணியாற்றிய ஒரே அமைச்சர் நான் மட்டும் தான் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தான் திமுக அரசு என குற்றம் சாட்டியவர் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சி குறித்து தவறாக பேசுகிறார் எனவும், ஸ்டாலின் ஒரே ஒரு குளத்தை தூர்வாரி விட்டால் அனைத்து குளத்திலும் நீர்மட்டம் ஏறி விடுமா என கேள்வி எழுப்பினார். இந்த அரசை தரக்குறைவாக தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசிகின்றார் எனவும், திமுக தலைவர் கருணாநிதி தான் ஊழலையே அறிமுகப்படுத்தியவர் என்றவர் 2ஜி வழக்கில் சிக்கியவர்தான் கனிமொழி எனவும் தெரிவித்தார். ஸ்டாலின் என்ன மக்கள் சேவகரா? என கேள்வி எழுப்பியவர், நமக்கு நாமே பயணம் என கூறி மக்களை ஸ்டாலின் ஏமாற்றுவதாகவும் தெரிவித்தார்.

தமிழக அமைச்சர்களை ஸ்டாலின் கேவலமாக பேசுவதாக குற்றம்சாட்டிய அமைச்சர் செல்லூர்ராஜூ, அமைச்சர்களை இப்படி பேசுவதை ஸ்டாலின் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும், ஆட்சியில் தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்ள தயாராக இருக்கின்றோம் என தெரிவித்த அமைச்சர் மக்கள் தான் தங்களுக்கு எஜமானர்கள் என தெரிவித்தார்.

பள்ளிகளில் முட்டை போடவில்லை என தவறான தகவலை ஸ்டாலின் சொல்கின்றார் எனவும் தங்கள் பாதை தெளிவானது எனவும், 2023 விஷன் திட்டப்படி அடுத்த முறையும் அதிமுக ஆட்சி கண்டிப்பாக தமிழகத்தில் அமையும் என செல்லூர் ராஜூ தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேட்டியளித்தவர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் தங்களுக்கு கோவில் போன்றது எனவும்,அங்கு வருமான வரித்துறை சோதனை நடத்தியது வருத்தம் அளிக்கின்றது எனவும் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...