ஆளுநரை கண்டித்து தபெதிக அமைப்பினர் முற்றுகை போராட்டம்


கோவை, நவம்பர் 15: கோவையில் தமிழக ஆளுநர் தலைமையில் கூட்டம் நடைபெறுவதை கண்டித்து தபெதிக அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மாவட்ட அதிகாரிகளை சந்தித்து தமிழக ஆளுநர் உத்திரவு வழங்குவது மாநில உரிமைகளை பறிக்கின்ற நசுக்குகின்ற செயல் என அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்னயணன் குற்றம் சாட்டினார்.

புதுவையில் துணை நிலை ஆளுநரால் செய்யப்படும் செயலை தமிழகததில் ஆளுநர் பன்வாரிலால் துவங்கி வைத்து இருக்கின்றார் என்றும் தமிழக அமைச்சரவை செய்ய வேண்டியதை தற்போதை ஆளுநர் செய்கின்றார் எனவும் குற்றம்சாட்டினார்.

தமிழக அரசு பா.ஜ.கவின் பினாமி அரசாக, எடுபிடி அரசாக நடந்து வரும் நிலையில் கவர்னர் இந்த நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றார் எனவும், அதிமுக பெயரில் கட்சி வைத்து நடத்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி இதை எப்படி அனுமதித்தார் எனவும் கேள்வி எழுப்பிய கு.ராமகிருஷ்ணன், அண்ணாவின் கொள்கைகளை அதிமுக குழி தோண்டி புதைத்து வருகின்றது எனவும், ஆளுநரின் நடவடிக்கை மாநில உரிமைகளை பறிக்கும் செயல் எனவும் இதை தபெதிக அனுமதிக்காத எனவும், சுதந்திரத்திற்கு பின்னர் எந்த ஒரு ஆளுநரும் செய்யாத நிகழ்வை தற்போதைய ஆளுநர் செய்கின்றார் எனவும் குற்றம்சாட்டினார். 

இதனையடுத்து போராட்டம் நடத்தி தபெதிக அமைப்பினரை காவல் துறையினர் குண்டுகட்டாக கைது செய்து அழைத்து சென்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...