பிரதமர், நிதியமைச்சருக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு நன்றி

கோவை, நவம்பர் 11: 178 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கைக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. 28 சதவீத ஜிஎஸ்டி வரியின் கீழ் உள்ள சிமெண்டின் வரியை குறைக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-வது ஆலோசனைக் கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் 2 நாட்கள் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், ஏசி ரெஸ்டாரன்ட்களில் வழங்கப்படும் உணவுகளின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சாக்லேட்கள், சூயிங் கம், ஷாம்பூ, சோப்பு, ஷூ பாலிஷ், ட்யோடரென்ட், சத்துள்ள பானங்கள், மார்பிள், அழகு சாதன பொருட்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான அழகு சாதன மூலப் பொருட்கள், ஷேவிங் மற்றும் ஷேவிங்கிற்கு பிறகு பயன்படுத்தும் பொருட்கள், சலவை பவுடர்கள், கிரானைட் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் வனிதா மோகன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 178 பொருட்கள் மீது மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையை இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு வரவேற்கிறது. பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் அருண்ஜேட்லிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வரி குறைப்பு நடவடிக்கையால், உற்பத்தி மற்றும் தொழில் துறையில் நிலவி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு, சிறு மற்றும் குறு தொழிலாளர்களின் வியாரபாரம் மீண்டும் தலைத்தோங்கும். முறையாக வரி செலுத்துவோருக்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கூறியதைப் போலவே ஜிஎஸ்டி வரிக் குறைக்கப்பட்டதால், மக்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளது. மேலும், 28 சதவீத ஜிஎஸ்டி வரியின் கீழ் உள்ள சிமெண்டின் வரியை குறைக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...