அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் கமல்ஹாசன் - மேற்கு வங்க முதலமைச்சருடன் சந்திப்பு

நவம்பர் 10 

மேற்கு வங்க மாநிலத்திற்குத் திரைப்பட விழாவுக்குச் சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன், அங்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசியுள்ளார். 

தனது பிறந்த நாளையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திப்பேன். அதன்பிறகு கட்சி பெயர் பற்றி முடிவு செய்து அறிவிப்பேன்” என்று கூறினார். இதற்காக புதிய செல்போன் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்தார். அரசியல் கட்சி தொடங்கத் தனது அன்பு ரசிகர்களுடன், விவசாயிகளும் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார். 

கமல் புதிய கட்சி தொடங்குவது குறித்து, ஏற்கனவே திருவனந்தபுரம் சென்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயனைச் சந்தித்து ஆலோசனை செய்தார். சமீபத்தில் சென்னை வந்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், கமல்ஹாசனை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். இருவரும் அரசியல் குறித்து பேசினர். அவரிடமும் தான் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை செய்தார். இவ்வாறு பாஜக, மற்றும் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களுடன் நெருக்கம் காட்டி வந்த அவர், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியையும் சந்திக்கத் திட்டமிட்டு இருந்தார். 

இந்த நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன், அங்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். தொடர்ந்து, அரசியல் பிரவேசத்திற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதன் மூலம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அவர், தற்போது மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் சுறுசுறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...