கோவை, நவம்பர் 7: கந்துவட்டிக் கொடுமையில் இருந்து தங்களை காப்பாற்றுமாறு கோவை மாநகர காவல் ஆணையர் திரு. அமல்ராஜிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

சவுரிபாளையம் பகுதியில் சுப்ரமணி என்பவர் கந்துவட்டி தொழில் செய்து வருகிறார். இவரிடம், குருராசன், மணிகண்டன், விஜயேந்திர பூபதி, கார்த்திகேயன், ரெஜிஸ் சாந்தகுமார் ஆகிய ஐந்து பேரும் தொழில் தொடங்கக் கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர். இதில், குருராசன் என்பவர் ரூ.1.80 லட்சம் வாங்கியதாகவும், இதுவரை ரூ.7.89 லட்சம் வட்டி மட்டுமே கட்டிவிட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல, வாங்கிய தொகையை விட 3 மடங்கு தொகையை மற்ற அனைவரும் கட்டி விட்ட பிறகும், இன்னும் பணம் வேண்டும் என சுப்ரமணி தங்களை மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்ட 5 பேரும் இன்று (நவம்.,7) கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
தொழில் துவங்க ரூ.7 லட்சம் பணம் வாங்கி தற்போது வரை 10 மடங்கு அதிகமாக பணம் கட்டியும், மேலும், ரூ.20 லட்சம் செலுத்துமாறு சுப்ரமணி வீட்டிற்கு வந்து மிரட்டுவதாக மணிகண்டன் புகார் தெரிவித்தார். மேலும், வட்டிக்கு பணம் வாங்கும் போது உறுதிமொழி பத்திரம், நிரப்பப்படாத மூன்று காசோலைகள் என பல்வேறு உறுதி தாள்களை வாங்கி வைத்துக்கொண்டு தங்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.