கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞர்கள் அரசு விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

கோவை, நவம்பர் 7: கலைத் துறையில் சாதனை படைத்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் அரசு விருதுகள் பெற விண்ணப்பம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றம் மூலமாக ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது.

அதன்படி, 18 வயதிற்கு உட்பட்டோருக்கு "கலை இளமணி", 19 வயது முதல் 35 வயது பிரிவினர்க்கு "கலை வளர்மணி", 36 வயது முதல் 50 வயது பிரிவினர்க்கு "கலை சுடர்மணி", 51 வயது முதல் 60 வயது பிரிவினர்க்கு "கலை நன்மணி", 61 வயதுக்கு மேற்பட்ட பிரிவினர்க்கு "கலை முதுமணி" என வயதின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், சிற்பம், நாடக கலைஞர்கள் நாதசுரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, அரசன் அரசி ஆட்டம், மரக்கால் ஆட்டம், தெருக் கூத்து ஆகிய கலைகள் உள்ளிட்ட கிராமியக்கலைகளைத் தொழிலாகக் கொண்டு கலைத்துறையில் சாதனைபடைத்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவ்விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.

மாவட்டக் கலை மன்ற விருதாளர் தெரிவுக் குழுவினரால் தெரிவு செய்யப்படும் கலைஞர்களுக்கு அரசு விழாவில் இவ்விருது வழங்கப்படும். தாங்கள் விருது பெற தங்களது சுய விபரக் குறிப்புடன் வயது மற்றும் பணியறிவு ஆகியவற்றைக் குறிப்பிட்டு நிழற்படம் இணைத்து சான்றுகளுடன் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், அரசு இசைக்கல்லூரி வளாகம், செட்டியாளையம் பிரிவு, மலுமிச்சம்பட்டி (அஞ்சல்), கோவை - 641 050 என்ற முகவரிக்கு வரும் நவம்பர் 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு கலை பண்பாட்டுத் துறையின் கோவை மண்டல அலுவலகத்தை 0422- 2610290 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...