கோவை, அக்டோபர் 30- பணியின் போது மின்சாரம் தாக்கியதால் இரு கைகளும் பாதிக்கப்பட்ட இளைஞர் செந்தில்குமார், இழப்பீட்டுத் தொகையினை பெற்றுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு கோவை நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த சேது என்பவரின் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் இரு கைகளும் செயல் இழந்தன.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் கைகள் பாதிக்கப்பட்ட அவருக்கு 6 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்திரவிட்டது. இந்த தொகையினை வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூல் செய்து பாதிக்கப்பட்டவருக்கு வழங்க நீதிமன்றம் உத்திரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அவர் கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் திரு. டி.என்.ஹரிஹரன்-யிடம் தனது இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரக் கோரி இன்று செந்தில்குமார் மனு அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.