முத்தண்ணன் குளத்தில் தொடரும் தூய்மைப் பணி


கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தொடர் களப்பணிகள் மூலம் பல்வேறு குளங்களையும், நீர்நிலைகள், ஆக்கிரமிப்புகளையும் அகற்றி வருகின்றனர்.

அதன்படி, இன்று (அக்டோபர் 29) 38-வது வார களப்பணியாக முத்தண்ணன் குளம் என்றழைக்கப்படும் குமாரசாமி குளத்தில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் இஎப்ஐ கோயம்புத்தூரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கணப்பணியில் கோவை மாநகராட்சி, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த களப்பணியில் 2 டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகமும், அமெரிக்காவின் The Nature Conservancy அமைப்பும் இணைந்து குளங்களை சீரமைக்கும் ஆய்வுப் பணியின் முதற்கட்ட கலந்தாய்வினை தன்னார்வலர்களுடன் மேற்கொண்டனர்.

பின், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள் வெள்ளலூர் ராஜ வாய்க்கால் சீரமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டி ஊரகவளர்ச்சி, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து, விரைந்து நடவடிக்கைகள் எடுக்க ஆவண செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

Newsletter

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...