இது தொடர்பாக தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிவிப்பில், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
ரயில் எண் - 02198/02197 கோவை - ஜபால்பூர் (மத்தியபிரதேசம்) - கோவை வாராந்திர அதிவேக ரயில்
இதில், 3 குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 10 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 4 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 19 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாராந்திர அதிவேக ரயில் - ஜபால்பூரில் இருந்து சனிக்கிழமை முதல் 04.11.2017 மற்றும் 30.11.2017 வரை 9 முறை இயக்கப்படும்.
கோவையில் இருந்து திங்கட்கிழமை முதல் 06.11.2017 மற்றும் 01.01.2018 வரை 9 முறை இயக்கப்படும்
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.