மகளின் கொலை வழக்கினை சிறப்பு பிரிவு விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி காவல் துறை ஆணையரிடம் பெற்றோர் மனு



மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் கொலை செய்யப்பட்ட ருக்சானா வழக்கினை சிறப்பு பிரிவு விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி அவரது பெற்றோர் கோவை மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம், கோவில் மேடு பகுதியைச் சேர்ந்தவர் எம்.ஹைதர் ஷரிப். இவரது மகள் ருக்சானா மர்ம நபர்களால் மேட்டுப்பாளையம் அருகே கல்லார் பகுதியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, இந்த கொலை வழக்கினை சிறப்புப் பிரிவு விசாரணைக்கு மற்ற வேண்டும் என்றும், குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அவரது பெற்றோர் இன்று கோவை மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து ஹைதர் ஷரிப் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

எனது மகள் ருக்சானா கடந்த 16.10.2017 அன்று காலை 11 மணியளவில் தனது தோழியிடம் புத்தகம் வாங்கி வருவதாகச் சொல்லி சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து, பல இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் 18.10.2017 அன்று சாய்பாபாகாலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.



ஆனால், அந்த புகார் மனு குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ந்து காவல் நிலையத்தில் வலியுறுத்தி வந்ததின் அடிப்படையில் ருக்சானா-விற்கு கடைசியாக போன் செய்த நபர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க சாய்பாபா காலனி போலீசார் முயற்சி மேற்கொண்டு 22.10.2017 அன்று எனது மகளுக்கு போன் செய்திருந்த பிரசாந்த் என்பவரை விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

மேற்படி பிரசாந்த், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எனது வீட்டிற்கு வந்து தகராறு செய்ததால் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் பிரசாந்த் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பிரசாந்தால் என் மகள் உயிருக்கு ஆபத்து இருந்த விவரத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பே சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகாராக தெரிவித்திருந்தேன். ஆனால், அப்போதே உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தவறிவிட்டனர்.

இந்நிலையில் எனது மகள் மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் வைத்து மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். எனது மகளின் மரணம் குறித்து தவறான தகவல்களை ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பதிவு செய்து இறந்து போன நபரை மீண்டும் மீண்டும் படுகொலை செய்கின்றனர்.

எனது மகள் மிகவும் நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து வந்ததோடு எங்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பவராகவே இருந்தார். அவருக்கு எதிர் வரும் ஜனவரி 2018-ல் திருமணம் நடத்த உத்தேசித்து அதற்கான ஆயத்த பணிகளில் இருந்த நிலையில் மிகவும் திட்டமிட்டு எனது மகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த விதம் மேற்படி சம்பவத்தில் ஒரு நபர் மட்டும் ஈடுபட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதையே காட்டுகிறது.

எனவே, இந்த பின்னணியில் உள்ள நபர்கள் மற்றும் உதவிய நபர்கள் ஆகியோரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வரையிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடாமல் இருக்கும் வகையிலும் எனது மகளின் கொலை வழக்கு சிறப்பு பிரிவு விசாரணைக்கு மாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...