காட்டு யானை முன்பு நின்று செல்பி எடுத்த வாலிபர்களுக்கு அபராதம்

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையின் முன்பு நின்று செல்பி எடுத்த வாலிபர்களுக்கு தமிழக வனத்துறையினர் அபாரதம் விதித்தனர். 

தமிழக வனத்துறையின் கீழ் உள்ள கோவை வனச்சரகத்தில் யானை, மான் உள்ளிட்ட காட்டு விலங்குகள் அதிகம் உள்ளன. அவைகள் அவ்வப்போது, குடியிருப்புப் பகுதிகளுக்கோ அல்லது சாலைகளுக்கோ வந்து செல்லும். அப்போது, தற்போதைய இளைஞர்கள் செல்பி எடுப்பதற்காக, வனவிலங்குகளை தொந்தரவு செய்து வருவது வாடிக்கையாகி வந்தது. 



இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

இந்த நிலையில், கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையின் முன்பு நின்று வாலிபர்கள் செல்பி எடுப்பது வனத்துறையினருக்கு தெரிய வந்தது. உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள், கார்த்திக், ரஞ்சித்குமார், பிரகாஷ்குமார் ஆகியோரை பிடித்து, கடுமையான எச்சரிக்கை விடுத்துடன், தலா ரூ.5,000 அபராதம் விதித்தனர். 

இதனிடையே, புகைப்படம், செல்பி எடுப்பது உள்ளிட்ட மோசமான நடவடிக்கைகளால் வனவிலங்குகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில், யாரேனும் நடந்து கொண்டாலோ, அல்லது அவசர உதவிக்கோ 180042545456 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.  

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...