விவசாயிகளுக்கு ஆதரவாக இருசக்கர வாகனத்தில் சென்று இளைஞர்கள் பிரச்சாரம்

சென்னையை சேர்ந்த இளைஞர்கள் 12 மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விவசாயிகளுக்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

கடும் வறட்சி, விவசாயக் கடன் போன்றவைகளால் நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் நாள்தோறும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக, விவசாயம் அழிந்து, உணவிற்காக அடுத்த மாநிலத்தையோ, நாட்டையோ சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுமோ என்று தற்போதைய இளைஞர்களிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், சென்னையில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் குர்ஷித் ஹுசேன், சுரேஷ், புருஷோத், ஆண்ட்ரு, இம்ரான், ஓஸ்வல் ஹுசேன் மற்றும் ராஜா ஆகிய 7 இளைஞர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக 12 மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று, விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும், அவர்களுக்கு ஆதரவு திரட்டவும் முடிவு செய்தனர். 



அதன்படி, கடந்த 22-ம் தேதி சென்னையில் தங்களது பயணத்தை தொடங்கிய அவர்கள், வரும் நவம்பர் 2-ம் தேதி நிறைவு செய்கின்றனர். இதுவரை 900 கி.மீ. பயணம் செய்துள்ள இளைஞர்கள், ஊட்டியில் இருந்து இன்று (அக்.,26) மேட்டுப்பாளையம் வந்தனர். அவர்களை, ஊட்டி செல்லும் பேருந்துநிறுத்தம் அருகே கோவை இளைய தலைமுறை மற்றும் கோவை பைக்கர்ஸ் கிளப்பினர் வரவேற்றனர். 



இது தொடர்பாக இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ள இம்ரான் கூறுகையில், விவசாயிகளுக்கு ஆதரவான இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான அனைத்து செலவுகளும் எங்களுடையதே,. விவசாயிகளிடம் பேரம் பேசுவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். இதுபோன்று செய்வதால், ஏழை விவசாயி, மேலும் ஏழ்மை நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும், கல்விப் பாடத்திட்டங்களில், விவசாயம் பற்றி கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் என இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் வலியுறுத்தினர். 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...