வன்முறையிலிருந்து உலகம் விடுபட சமந்தா கல்வித்திட்ட புத்தகம் வெளியீடு

உலக அளவில் வன்முறையிலிருந்து விடுபட்டு, தலைமை பண்பை பள்ளிக் குழந்தைகளிடையே வளர்க்கும் சமந்தா கல்வித் திட்டப் புத்தகம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து குழந்தைகளின் பாலினத்திற்கும், அனைத்து மதத்தினருக்கும், இனத்துக்கும் ஏற்ப பணியாற்றும் வகையில் உருவாக்கப்பட்டதே சமந்தா திட்டமாகும். ஒருவருக்கு ஒருவர் மரியாதை அளித்து, மரியாதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டு மேம்பாடு செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.

அதற்கான கல்வித் திட்டங்களை உருவாக்கி, மதிப்புகளைக் கொண்டிருப்பதுடன், குந்தைகளின் தன்மையை சமந்தா மேம்படுத்தி வருகிறது. வன்முறைக்கு எதிரான, குறிப்பாக பாலியல் வன்முறைக்கு எதிராக பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க உலகம் முழுவதும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஒருங்கிணைந்த இந்த கல்விதிட்டத்தில், 3 முதல் 4 வயது முதல் துவங்கும் முதல் நிலையில் 140 பாடத்திட்டங்கள் இருக்கும் இரண்டாவது நிலையில் 4 முதல் 5 அல்லது 5 முதல் 6 வயதில் நிறைவு பெறும். அடுத்தடுத்த புதிய பாடங்கள் பள்ளி கல்வி நிறைவு பெறும் வயதில் 17 முதல் 18 ல் நிறைவு பெறும். உலக அளவில் 20 நிபுணர்கள் கொண்ட குழு, இதை வடிமைத்து மேம்படுத்தியுள்ளது. 

குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற வகையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம், வழிமுறைகள் குறித்து படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பாடத்திட்டம் இலங்கை, போட்ஸ்வானா, அர்ஜெண்டினா, கென்யா போன்ற நாடுகளில் முன்மாதிரி அடிப்படையில் கடந்த ஜனவரி 2017 முதல் துவக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2017 முதல் கனடா, இந்தோனேஷியா, மற்றும் நைஜீரியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கல்வித் திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை துாதர அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு கொரியா சியோல் நகரில் நடந்த உலக கல்வி மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கி மூன் இது தொடர்பாக அங்கீகாரம் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து தற்போது கோவையில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜய்கார்த்திகேயன் மூலம் சமந்தா தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் டி. லக்ஷ்மிநாராயணசாமி புத்தகங்களை பெற்றுக்கொண்டார். தலைமை கல்வி அதிகாரி உமா, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை தலைமை வியாபார அலுவலர் ஸ்வாதி ரோஹித் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...