கோவை மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு கடந்த இரு மாதங்களில் மட்டும் தனியார் மற்றும் அரசு பொது மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை அரசு பொது மருத்துவமனையில் 28 ஆண்கள், 23 பெண்கள் மற்றும் 10 ஆண், 7 பெண் குழந்தைகள் என மொத்தம் 68 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். மேலும், காய்ச்சல் காரணமாக 180 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தனிவார்டு ஒதுக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக இருப்பிட மருத்துவ அலுவலர் சவுந்திரவேல் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கோவை அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதித்த 49 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் தற்போது 68 ஆக எண்ணிக்கை உயர்ந்திருப்பது கோவையில் டெங்குவின் தாக்கம் அதிகரித்து வருவதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.