வான்வழி வர்த்தக மேம்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை விமான நிலையம் சார்பில், வான்வழி வர்த்தக மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பீளமேடு அருகே உள்ள சித்ரா பகுதியில் கோவை விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விமானங்கள் வந்து செல்கின்றன. மேலும், கோடிக்கணக்கான ரூபாய் அளவில் வர்த்தகமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவை விமான நிலையம் சார்பில் ”வான்வழி வர்த்தக மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பது” குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. 



இதில், கோவை விமான நிலையத் தலைவர் நாராயணன் கலந்து கொண்டு, வான்வழி வர்த்தக மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் கூறுகையில், கோவை விமான நிலையத்தில் உள்ள வசதிகளின் மூலம் அண்டை மாவட்டங்களிலும் தொழில் மேம்படைகின்றன. 

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யும் சரக்குகளை எவ்வாறு கையாள்வது, சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஆவணங்களை சரிபார்த்து விரைவில் அந்தந்த தொழில்சாலைகளுக்கு கொண்டு செல்வது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டதாகக் கூறினார். 

இது தொடர்பாக ஏ.ஏ.ஐ. சரக்கு போக்குவரத்து மற்றும் கூட்டு சேவைகள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேகு கேஜ்டெர் கூறுகையில், தங்களது நிறுவனமானது, நாட்டில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் பணியினை தொழிலதிபர்களுக்கு எளிதாக்குகிறது. சரக்குகளை தானியங்கி மூலம் இயக்கும் நடைமுறை வரும் நவம்பர் மாதம் இறுதிக்குள் கோவை விமான நிலையத்தில் கொண்டுவரப்படுகிறது. இது தொழில்நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

மேலும், ஒரு சில வகை சரக்குகளை எடுத்து வர விமான ஓடுபாதையை அகலப்படுத்த வேண்டும். இருநகரங்களுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையில் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரையில் சரக்கு விமானப் போக்குவரத்தில் கட்டுப்பாடுகளின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



அண்மையில் கோவை, தில்லி, மற்றும் சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இயக்குவதாக அறிவித்துள்ளது. இதேபோல, மேலும் பல விமான சேவைகளை உருவாக்க வேண்டும் என தொழில்நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...