முறையான ஊதியம் வழங்கக் கோரி ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் இரண்டாம் நாளாக வேலை நிறுத்தம்

முறையான ஊதியம் மற்றும் சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் இன்று இரண்டாம் நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



2016-17 ஆண்டுக்கான முறைப்படியான ஊதியம், சட்டப்படியான போனஸ் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஒப்பந்த துப்புரவுப் பணியாளர், ஓட்டுநர், கிளீனர் கோயமுத்தூர் லேபர் யூனியன், தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கம் மற்றும் ஜனசக்தி மஸ்தூர் சபா போன்ற அமைப்பினர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து, இன்று இரண்டாம் நாளாக கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதுகுறித்து, ஏஐடியுசி தலைவர் என்.செல்வராஜ் கூறுகையில், 'வியாழனன்று மாநகராட்சி சார்பாக சங்க நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் முறையான சம்பளம், போனஸ் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.



மேலும், அனைத்து மண்டலங்களிலும் குழுக்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். குழு அமைப்பது பற்றிய தகவல் அரசு சார்பாக வெளியிட வேண்டும் என்றும் கேட்டோம். ஆனால், அதற்கு மாநகராட்சி சார்பாக முறையான ஒப்புதல் கிடைக்கவில்லை. கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேரும் வரை போராட்டம் தொடரும்' என்றார்.

ஏஐடியுசி நிர்வாகி ஆர்.தேவராஜ் கூறுகையில், 'டெங்கு போன்ற நோய்கள் பரவிவரும் சூழலில் எங்கள் போராட்டத்தால் நகரில் குப்பைகள் அனைத்து இடத்திலும் சுத்தம் செய்யாமல் கிடக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் மேலும் தாமதிக்காமல் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன்பாக அனைத்து குப்பைகளும் கொட்டப்படும்' என்று எச்சரித்தார்.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...