கொஞ்சம் இனிப்பு.. கொஞ்சம் பசுமை.. நெஞ்சம் நிறைய அன்பு..!


தீபாவளி என்றால் காலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து முடித்துவிட்டு, பலகாரங்களை சாப்பிட்டுக் கொண்டே டி.வி.யில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி பார்ப்பது  ப அனைவரின் வழக்கம்.

ஆனால், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் வெளியூர் மற்றும் உள்ளுர் பேருந்து நிலையத்தில் பணியாற்றி கொண்டிருந்த சுமார் 100 பேருந்துகளின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு பசுமை தேசம் சார்பில் தீபாவளி வாழ்த்து கூறி, அவர்களுக்கு இனிப்பு, காரங்களுடன் துளசி நாற்று வழங்கப்பட்டது. இந்த எதிர்பாராத அன்பையும், வாழ்த்தையும் பெற்ற சில ஓட்டுனர்கள், எங்களையும் நேசிக்கிற மனுசங்க இருக்கிறார்கள் என்ற உற்சாகத்தை கொடுத்ததாகவும், இது எங்களுக்கு பெரிய அங்கீகாரம் என்றதுடன், நாங்களும் உங்களுடன் இணைந்து மரம் வைக்க தயார் என நெகிழ்ச்சியுடன் கூறினர்.

இவர்களுடன் காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முகம் தெரியாத. மனிதர்களுக்கு இனிப்பு வழங்கி பிறரை மகிழ்வித்து தாங்களும் மகிழ்ந்த, இந்த தீபாவளி மறக்க முடியாததாய் அமைந்ததாகவும், இதேபோல, கடந்த நான்கு வருடங்களாக இந்தப் பணியை செய்து வருவதாக பசுமை தேசத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...