பணி இடமாற்றத்தால் காவல்துறை உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி..? போலீஸார் விசாரணை

வேலூருக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவதை விரும்பாத காவல்துறை உதவி ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை குனியமுத்தூரை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 4-வது பட்டாலியன் செயல்பட்டு வருகிறது. இதில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ஸ்ரீகாந்த் (47). இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணி நிமித்தம் காரணமாக வேலூர் சிறப்பு காவல்படைக்கு பணிக்கு சென்றார். அங்கு, கோவையில் இருந்து வேலூருக்கு ஸ்ரீகாந்தை இடமாற்றம் செய்யவதாக அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து, தீபாவளி பண்டிகையையொட்டி, விடுமுறையில் வீட்டுக்கு வந்த அவர், பணியிடமாற்றம் குறித்து மனைவியிடம் அலோசித்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனால், விரக்தியடைந்த ஸ்ரீகாந்த் இன்று (அக்.,19) வீட்டில் இருந்த சாணிப்பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை ரயில்நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...