உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்புத்துறையினரின் மாதிரி செயல்விளக்க நிகழ்ச்சி

உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையுடன் இணைந்து மாதிரி செயல்விளக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் 1989-ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் அக்டோபர் 13-ம் தேதி உலக பேரிடர் குறைப்பு தினம் அனுசரிக்கவும் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக, ஆண்டுதோறும் பேரிடர் குறைந்தபட்ச செயல்திட்ட செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு, அடுத்த தலைமுறைக்கு சொல்ல வாழ்தல், விழிப்புணர்வை அதிகரித்தல், மரணத்தை குறைத்தல் என்பது பேரிடர் குறைந்தபட்ச செயல்திட்ட செய்தியாக வெளியிடப்பட்டது. 

இந்த உலக பேரிடர் குறைப்பு தினமானது, இந்தியாவிலும், மாவட்ட அளவில், சரியான விழிப்புணர்வு பாதையில் அனுசரிக்கப்படுகிறது. தாலுகா வாரியாக, பள்ளி மற்றும் கல்லூரிகளையும், தீயணைப்புத்துறையினரையும் ஒருங்கிணைந்து, பேரிடர் மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரியில் பேரிடர் மீட்பு பணிகள் குறித்த மாதிரி செயல்விளக்கம் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, இன்று (அக்.,13) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் நேரத்தில் எப்படி செயல்படுகின்றனர் என்பது குறித்து தீயணைப்புத் துறையின் சார்பில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. 

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...