கோவையில் உள்ள அணைகள் மற்றும் நீர்தேக்கங்களை ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை



ஜுலை மற்றும் செப்டம்பர் மாதம் வரையிலான முதல் பருவகால மழையானது, வெளுத்து வாங்கியதால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இருப்பினும், ஒரு சில அணைகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகளால் நீரை சேகரித்து வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கண்காணித்து, சரிசெய்ய வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மந்தமாக செயல்படுகின்றனர். இதனால், எதிர்வரும் மழைக்காலங்களில் அணைகளுக்கு வரும் நீரை சேகரித்து வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. 

குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகள் முறையான பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. எனவே, நகரில் உள்ள நீர்நிலைகளை சீர்செய்து, நீரை தேக்கி வைப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



இது தொடர்பாக சமூக வலைதளங்களுக்கு அளித்த பேட்டியில் சமூக ஆர்வலர் மணிகண்டன் பேசியதாவது, குறும்பபாளையம் அருகே உள்ள மதுக்கரை பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் இரண்டு ஏரிகள் உள்ளன. அறிவொளிநகர், பி.கே.புதூர், இடையர்பாளையம் மச்சம்பாளையம், சுந்தராபுரம், மைல்கல் மற்றும் குனியமுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் நீர், பொதுப்பணித்துறையினரால் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறு நீர்தேக்கங்கள் வழியாக ஏரிக்கு வந்தடைகிறது. 



நீர்தேக்கங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியதால், உடைப்பு ஏற்பட்டு நீர்தேக்கி வைக்க முடியாத நிலையில் உள்ளது. இதனை முறையாக பராமரித்தால், சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயத்திற்கு இந்த நீரை பயன்படுத்த முடியும். எனவே, உரிய நிதி ஒதுக்கி நீர்தேக்கங்கள் மற்றும் அணைகளை முறையாக பராமரித்து, எதிர்வரும் மழைக்காலங்களின் போது வரும் நீரை தேக்கி வைக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...