ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதமாகக் குறைக்க வலியுறுத்தி பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கத்தினர் (காட்மா) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள துணை அஞ்சலகத்தில் இருந்து பிரதமர், மத்திய அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினர். 



அப்போது,  ஜாப் ஆர்டர்களில் ஈடுபடும் குறுந்தொழில் கூடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜி.எஸ்.டி வரியினை 5 சதவீதமாக குறைக்க கோரியும், ஆண்டுக்கு இருபது இலட்ச ரூபாய்க்கு குறைவாக வருவாய் ஈட்டும் குறுந்தொழில் கூடங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழு விலக்கு அளிக்க கோரியும் 20 ஆயிரம் மின்னஞ்சல் மற்றும் தபால் அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர். 



மேலும், ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின்னர் குறுந்தொழில் கூடங்களில் 50 சதவீத உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அண்மையில் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி சலுகைகளில் குறுந்தொழிலுக்கு எந்த சலுகையும் இல்லை என குறுந்தொழில் முனைவோர்கள் குற்றம்சாட்டினர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...