கடந்த சில நாட்களாக கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தக் காயச்சலால் பாதிக்கப்பட்டு, உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி தலைமையில் மத்திய மண்டலம், 25-வது வார்டுக்குட்பட்ட பூமார்க்கெட், சண்முகா திரையரங்கு சாலை குடியிருப்பு பகுதிகளில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.
மேலும், பொதுமக்கள் தேக்கி வைத்துள்ள நீரில் டெங்கு கொசுப் புழுக்கள் உள்ளனா என்பதையும் துணை ஆணையாளர் காந்திமதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய மண்டல உதவி ஆணையாளர் அண்ணாதுரை, மண்டல சுகாதார ஆய்வாளர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.