கோவை மாநகராட்சி குடிநீர் இணைப்பு வைப்புத் தொகை செலுத்த கால நீட்டிப்பு

கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக துணை விதிகளின் படி அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. கோவை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன் இருந்த 72 வார்டுகளில் வீட்டு உபயோக குடிநீர் இணைப்பு பெற்ற இணைப்புதாரர்கள் கூடுதல் வைப்புத்தொகையாக ரூ.4000, வீட்டு உபயோகமல்லாத முறை இணைப்புதாரர்கள் ரூ.7000 செலுத்தப்பட வேண்டும்.

இதற்கான அறிவிப்பு அனைத்து குடிநீர் இணைப்புதாரர்களுக்கும் அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டு 15.09.2017-க்கு முன்னர் கூடுதல் வைப்புத்தொகை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மேற்படி கூடுதல் வைப்புத்தொகை செலுத்த மேலும் ஒரு மாத காலம் அதாவது 31.10.2017 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி குடிநீர் இணைப்பிற்கான கூடுதல் வைப்புத்தொகையை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மற்றும் சனிக்கிழமைகளிலும் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களிலும் இத்தொகையினை செலுத்தலாம். மாநகராட்சி அனைத்து வரிவசூல் மையங்களிலும் எந்த மண்டலத்தைச் சேர்ந்த இணைப்புதாரரும் இத்தொகையினை செலுத்த இயலும்.

மேலும், 01.10.2013-க்கு முன்னர் குடிநீர் இணைப்பு பெற்று அறிவிப்பு கிடைக்கப்பெறாத இணைப்புதாரர்கள் சம்பந்தப்பட்ட வரிவசூல் மையங்களுக்கு குடிநீர் கணக்கெடுப்பு புத்தகத்தை கொண்டு சென்று குடிநீர் இணைப்பு எண்ணின் அடிப்படையில் இத்தொகையினை செலுத்திக்கொள்ளலாம்.

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குடிநீர் இணைப்பிற்கான கூடுதல் வைப்புத்தொகையினை மாநகராட்சிக்கு தவறாமல் செலுத்தி ஒத்துழைப்பு தருமாறு மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...